உலகக்கோப்பை தொடருக்கு பிறகு முதல்முறையாக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனி! மீண்டும் களமிறங்குவது எப்போது?
dhoni first net practice after worldcup
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஜாம்பவான்களின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்து கொண்டவர் மகேந்திர சிங்க் தோனி. இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணைத்து வகையான சர்வதேச கோப்பைகளை பெற்று தந்தவர் இவர்.
38 வயதான தோனி கடைசியாக கடந்த ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தான் விளையாடினார். அதற்கு பின்னர் நடந்த எந்த தொடர்களிலும் தோனி கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரிசப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டு வருகிறார். ஆனால் அவரும் கடந்த தொடர்களில் சரிவர விளையாடவில்லை.
இந்நிலையில் தோனிக்கு மாற்றாக ஒரு வீரரை கண்டறிய இந்திய அணி பல சோதனைகளை செய்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான t20 தொடரில் சன்ஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். இப்படி ஒரு சூழ்நிலையில் தோனி மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவாரா? எப்போது மீண்டும் காலம் காணுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக தோனி நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ராஞ்சி மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் மீண்டும் இந்திய அணியில் தோனி ஆடுவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால் அடுத்து நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்களில் கலந்து கொள்வது சந்தேகமே.
அநேகமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நியூஸிலாந்திற்கு எதிரான t20 தொடரில் தோனி மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கியமாக அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள t20 உலகக்கோப்பை தொடரில் தோனி நிச்சயம் ஆட வேண்டும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது.