அகல பந்தையும் விட்டு வைக்காத தோணி! கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு!
Dhoni hits continues sixes in last over
ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி முதல் இடத்திலும் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணி மோதும் இரண்டாவது ஆட்டம் இன்று சென்னையின் சொந்த மண்ணில் நடைபெறுகிறது.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளஸி சொதப்பலாக ஆட ஆரம்பித்தனர். மூன்று ஓவர்கள் முடிவில் சென்னை அணி மூன்று ரன் மட்டுமே எடுத்து.
9 பந்துகளில் 0 என்ற நிலையில் வாட்சன் ஆட்டம் இழக்க ரெய்னா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். 59 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரெய்னா ஆட்டம் இழக்க அணியின் கேப்டன் தோணி களமிறங்கினார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய தோணி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இறுதி ஓவரில் ஆடுமுனையில் நின்ற தோணி முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் இரண்டாவது பந்தில் இரண்டு ரன்னும், மூன்றாவது பந்தில் நான்கு ஓட்டமும் எடுத்தார். நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ராய்டு ஆடுமுனைக்கு சென்றார்.
ஐந்தாவது பந்தை அகலபந்தாக வீசினார் போல்ட். பந்து விக்கெட் கீப்பரிடம் சென்ற நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தோணி ஒரு ஓட்டம் எடுத்தார். ஐந்தாவது பந்தில் மீண்டும் ஆடுமுனைக்கு வந்த தோணி 5 வது பந்தில் ஒரு சிக்சரும், ஆறாவது பந்தில் மேலும் ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் அடித்து அணியின் எண்ணிக்ககையை மளமளவென உயர்த்தினார்.
அகலப்பந்தையும் விட்டு வைக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிக்ஸர் மழை பொழிந்தார் கேப்டன் தோணி.