×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தல தோனி கிரிக்கெட்டிலிருந்து நிரந்தர ஓய்வு பெறுகிறாரா? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!!

dhoni not retire from cricket

Advertisement

12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்துள்ளது. உலகமே ஆவலோடு எதிர்நோக்கியிருந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், மூத்த வீரருமான தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், தோனி இதுவரை ஓய்வு குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. அங்கு நடைபெறும் இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. 

அந்த போட்டி  தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் தோனி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய உள்ளதாகவும், அதற்காக விளையாட்டிலிருந்து இரண்டு மாத காலங்கள் ஓய்வு எடுப்பதாகவும் பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு,தோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக  ஓய்வு பெறவில்லை. அவர் தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாதம் ஓய்வு எடுத்துள்ளார். எனவும் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #dhoni #BCCI
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story