தல.. உங்கள இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆயிடுச்சு.. இணையத்தை தெறிக்கவிடும் தோனியின் புகைப்படம்..
சென்னை அணியின் கேப்டன் தோனி பயிற்சியில் ஈடுபட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை அணியின் கேப்டன் தோனி பயிற்சியில் ஈடுபட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றநிலையில் இந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலையே நடைபெறுகிறது.
இந்நிலையில் போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து அணி வீரர்களும் தற்போதில் இருந்தே பயிற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த முறை சென்னை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தநிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்க இருக்கிறது. இந்நிலையில் தோனியை தொடர்ந்து சென்னை அணியின் இளம் வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தோனி பயிற்சியில் ஈடுபட்டுவரும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு, அதை சென்னை அணி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.