கெத்து காட்டிய இந்திய அணியின் 2 பவுலர்கள்.! இங்கிலாந்துக்கு மிக மோசமான சாதனையை தேடித் தந்த 2 வீரர்கள்.!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொ
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 12 ஆம் தேதி துவங்கியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்ஸில் நடைபெற்று முடிந்த 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோரி பார்ன்ஸ் மற்றும் டாமினிக் சிப்லி வந்த வேகத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் சிக்கி டக் அவுட் ஆனர்கள். ரோரி பார்ன்ஸ் இந்திய அணியின் பும்ரா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனையடுத்து டாமினிக் சிப்லி முகமது சமி ஓவரில் டக் அவுட் ஆனார்.
இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் தனது சொந்த மைதானத்தில் துவக்க வீரர்கள் 2 நபரும் டக் அவுட் ஆகி வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.