பல வரலாற்று பிழைகளை திருத்தி அமைத்த ஒரே ஆட்டம்! இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டம்
England ended long years records
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தததன் மூலம் இங்கிலாந்து அணி பல வரலாற்று பிழைகளை மாற்றி அமைத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அபாரமாக ஆடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெயர்ஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்வானார்.
இங்கிலாந்து அணி கடைசியாக 1983 ஆம் ஆண்டு தான் நியூசிலாந்தை உலகக் கோப்பையில் தோற்கடித்து இருந்தது. அதன் பிறகு 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணி கடைசியாக 1992ஆம் ஆண்டு தான் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. அப்போது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானிடம் தோற்றது.
1992க்குப் பிறகு நடைபெற்ற 6 உலகக்கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறவே இல்லை. தற்போது ரசிகர்களின் அந்த கனவை போக்கியுள்ளது இங்கிலாந்து அணி.