வலுவான நிலையில் இந்திய அணி.! டார்கெட் எவ்வளவு தெரியுமா.? குஷியில் ரசிகர்கள்.!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வர
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நிதானமாக ஆடிய கேப்டன் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து அதிரடியாக ஆடிய ஷர்துல் தாக்குர் 72 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார்.
இதனையடுத்து நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்து மொயீன் அலி பந்து வீச்சில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது. இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில், 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.