பிரதமர் முன் இங்கிலாந்து வீரர் இப்படியா நடந்துகொள்வது? சர்ச்சையான வீடியோ!
england player fun front of PM

இங்கிலாந்து அணி 2019 அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர்கள் வெற்றியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
இதனையடுத்து அந்த அணி வீரர்கள் பலருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த நாட்டு பிரதமர் தெரசா மேவை நேரில் சந்தித்த வீரர்கள், அவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தெரசா மேவுடன் புகைப்படம் எடுக்கும்போது வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமருக்கு அருகில் நின்றிருந்த அவர், சக வீரரின் தலையில் கையில் வைத்து கிண்டல் செய்து விளையாடுகிறார்.
அந்த வீடியோவில் ஆர்ச்சர் மைதானத்தில் இருப்பது போன்று விளையாட்டுத்தனமாக இருக்கிறார். மேலும், பிரதமருக்கு அருகில் நிற்கிறோம் என்ற பயம் கூட இல்லாமல் சக வீரரின் தலையில் கையில் வைத்து அவரை கிண்டல் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.