இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!!அலெஸ்டர் குக் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித் தலைவரும் ஆவார்.
இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக நடைபெற்ற பயிற்சி போட்டியில் சதமடித்த இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர் அலெஸ்டர் குக் அதற்கடுத்து ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
இந்திய அணியுடன் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அலெஸ்டர் குக் தொடர்ந்து சொதப்பியதால் அவர் தானாக முன் வந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் வலுத்தது.
அலெஸ்டர் குக் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் இங்கிலாந்து அணி நிர்வாகம் அலெய்ஸ்டர் குக்கிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தது. இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் மற்றும் பயிற்சியாளர் பெலிஸ் உட்பட அனைவரும் அலிஸ்டர் குக்கிற்கு ஆதரவாகவே பேசி வந்தனர்.
இந்த நிலையில் அலெஸ்டர் குக் தற்போது திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அலிஸ்டர் குக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ” இன்று எனக்கு மோசமான நாள். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே சாதித்து விட்டதாக நினைக்கிறேன் நிறைய போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எனது பங்களிப்பை சரியாக செய்ததன் மூலம் வெற்றியும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
ஆனால் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இது சரியான தருணம் என்று நினைக்கிறேன் இந்திய அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற் திட்டமிட்டுள்ளேன். எனது சக வீரர்கள் எனது இந்த இந்த முடிவிற்கு எதிராக உள்ளனர் இருந்தபோதிலும் இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அலெஸ்டர் குக்கின் இந்த முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.