×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய பந்துவீச்சாளர்கள் திணறல்.! ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் அசத்தலால் இங்கிலாந்து அணி அபார வெற்றி.!

இந்திய பந்துவீச்சாளர்கள் திணறல்.! ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் அசத்தலால் இங்கிலாந்து அணி அபார வெற்றி.!

Advertisement

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 5-வது டெஸ்ட் போட்டி தற்போது பர்மிங்காமில் தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜானி பேர்ஸ்டோ 106 ரன்களை விளாசினார். இதைத் தொடர்ந்து, 136 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-ஆம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்தநிலையில், இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #England #test cricket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story