தடை அதை உடை... புது சரித்திரம் படை.! வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்.!
தடை அதை உடை... புது சரித்திரம் படை.! வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்.!
கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் குரூப்- இ பிரிவில் கோஸ்டா ரிகாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான ஆட்டம் இன்றிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முதல் முறையாக பெண் நடுவர்கள் குழு களத்தில் இறங்குகிறது. ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் பெண் நடுவர்கள் களமிறங்கப் போவது இதுவே முதல் முறையாகும்.
ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் ஸ்டெபானி ப்ராபாரட் என்ற பெண் நடுவராக செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதாகும் பிரான்ஸ் நடுவர் ஸ்டெபானி ப்ராபாரட் தனது பெயரை கால்பந்து வரலாற்றில் எழுதுவது இது முதல் முறை அல்ல. லீகு 1 மற்றும் யுஇஎஃஏ சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நடுவராக இருந்த முதல் பெண்மணி என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
மேலும், துணை நடுவர்களாக நியூசா பேக், கரென் டயஸ் ஆகியோர் கொண்ட பெண் நடுவர் குழு களத்தில் இறங்குகின்றனர். இத்தகவலை ஃபிபா அமைப்பு தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.