4-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் செய்த செயல்.! அபராதம் விதித்த ஐசிசி
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல், நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தின் 34-வது ஓவரின்போது, ஆன்டர்ஸன் வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் 46 ரன்கள் எடுத்தநிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த கேட்ச் பிடிக்கப்பட்ட விதம் சர்ச்சையானதையடுத்து டிஆர்எஸ் முடிவுக்கு ராகுல் சென்றார். இதனையடுத்து மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து ராகுலுக்கு அவுட் வழங்கினார்.
மூன்றாவது நடுவர் முடிவை கள நடுவர் அறிவித்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.எல்.ராகுல் நடுவரிடம் வாக்குவாதம் செய்து புறப்பட்டார். இந்தநிலையில், சர்வதேசப் போட்டியின்போது, நடுவரின் முடிவுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராகுல் செயல்பட்டதால், ஒழுக்க விதிகளை மீறியதாக ராகுலுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது.