கால்பந்து ஜாம்பவான் கொரோனாவுக்கு பலி! சோகத்தில் ரசிகர்கள்!
football player died
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் ஈராக் கால்பந்து விளையாட்டு வீரர் அகமத் ராதி கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
ஈராக்கின் கால்பந்து ஜாம்போவானாக திகழ்ந்த அகமத் ராதிக்கு 56 வயதாகிறது. இவர் ஈராக் கால்பந்து அணிக்காக 121 ஆட்டங்களில் விளையாடி 62 கோல்கள் அடித்துள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடித்த ஒரே ஈராக் வீரர் இவர் தான். அவரது மறைவுக்கு கால்பந்து வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.