இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கொரோனாவால் மரணம்! பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்!
former cricket player died
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேத்தன் செளஹான் உடல் நலகுறைவால், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் சேத்தன் செளஹான் சிகிச்சை பெற்று வந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்து இருந்தன. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சேத்தன் செளஹான் இன்று காலமானர்.
சேத்தன் செளஹான் , அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், விடாமுயற்சியுள்ள அரசியல் தலைவராகவும் தன்னை வேறுபடுத்தி கொண்டார். உ.பி-யில் பாஜகவை வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையாற்றுவதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பாரத பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல், "திரு. சேதன் செளஹான் தனது வாழ்க்கையில் முதன்முதலில் ஒரு விளையாட்டு வீரராகவும் பின்னர் பொது ஊழியராகவும் பணியாற்றினார். அவரது மரணம் இந்திய அரசியலுக்கும் கிரிக்கெட்டுக்கும் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சாந்தி" என உள்துறை மந்திரி அமித்ஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.