இந்திய வீரர்களின் தேர்வு முற்றிலும் தவறானது - சவுரவ் கங்குலி பகீர் குற்றச்சாட்டு!
Ganguly blames on team selection for wi
அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
இந்தப் பட்டியலில் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ள அணி வீரர்களுக்கும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் பெற்றுள்ள அணி வீரர்களுக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகிய மூவர் மட்டுமே மூன்று வகையான போட்டிகளிலும் இடம் பிடித்துள்ளனர்.
ரகானே, புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, விருத்திமான் சஹா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் போன்றோர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றுவதால் இந்திய அணியில் ஒரு சீரற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்குலி, "இந்திய அணியில் அனைத்து விதமான போட்டிகளுக்கும் ஒரே வீரர்களை தேர்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் வீரர்களுக்குள் தன்னம்பிக்கையும் தொடர்ந்து சிறப்பாக ஆடும் திறனும் வளரும்.
ஒரு சிறந்த அணி என்பது அனைத்து விதமான போட்டிகளிலும் சீராக ஆடக்கூடிய வீரர்களைக் கொண்டு இருக்க வேண்டும். வெறுமனே வீரர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக மட்டுமே அவர்களை தேர்வு செய்ய கூடாது. மாறாக அணியின் சீரான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.