கோபத்துடன் மைதானங்களில் முகத்தை வைத்திருப்பது ஏன்? - மனம்திறந்த கெளதம் காம்பீர்.!
கோபத்துடன் மைதானங்களில் முகத்தை வைத்திருப்பது ஏன்? - மனம்திறந்த கெளதம் காம்பீர்.!
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது என்பதால், 2024 கோப்பையை வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்காக இரண்டு அணியின் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
கொல்கத்தா அணி தான் எதிர்கொண்ட 14 போட்டிகளில் 9 போட்டியில் வெற்றி அடைந்துள்ளது. 1.428 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் கொல்கத்தா அணி
இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்த கவுதம் காம்பீர், எப்போதும் ஐபிஎல் மைதானங்களில் கோபமான மற்றும் இறுக்கமான முகத்துடன் தோற்றமளித்து வருவார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
மனம் திறந்த காம்பீர்
"நான் சிரிப்பது கிடையாது, எப்போதும் முகத்தை கோபமாக வைத்திருக்கிறேன் என பலரும் சொல்லி இருக்கிறார்கள். இதனை நானும் கேட்டிருக்கிறேன். நான் சிரிப்பதை பார்க்க ரசிகர்கள் வருவது கிடையாது, நான் வெல்வதை பார்க்கவே அவர்கள் வருகிறார்கள்.
பொழுதுபோக்கு துறையிலும் நான் இல்லை, பாலிவுட் நடிகரும் கிடையாது. கிரிக்கெட் துறையில் இருப்பதால் எனது விதிகளுக்கு உட்பட்டு என்னால் முடிந்தவற்றை திறம்பட செய்து அணியின் வெற்றிக்காக உழைக்கிறேன். அந்த வெற்றியோடு உடை மாற்றும் அறைக்கு திரும்ப வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருக்கும். அதனாலேயே எனது முகம் அப்படி இருக்கிறது" என கூறினார்.