கோலி தலைமையில் இப்போது இருக்கும் பௌலர்கள் தான் டாப்.. சுனில் கவாஸ்கர் புகழாரம்!
Gavaskar praises about current indian bowlers
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கோலி தலைமையில் விளையாடும் பௌலர்கள் மிகவும் திறமையானவர்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணி குறித்து பேசியுள்ள கவாஸ்கர், கோலி தலைமையிலான தற்போதைய டெஸ்ட் அணி எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெற கூடிய தகுதியில் உள்ளது. தற்போது இருக்கும் பௌலர்கள் பல யுக்திகளை பயன்படுத்தி எதிரணியினரை வீழ்த்துகின்றனர்.
இந்திய அணியின் தற்போதைய சிறப்பான பௌலிங் அட்டாக்கால் தான் இந்திய அணி பலம் வாய்ந்த டெஸ்ட் அணியாகவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 1980களில் இந்திய அணியில் இருந்த பேட்டிங் திறன் தற்போது இருப்பதாகவும் ஆனால் பௌலர்களை பொறுத்தவரை இப்போது இருக்கும் திறமை இதற்கு முன்னதாக இந்திய அணியில் ஒருபோதும் இருந்ததில்லை என கவாஸ்கர் கூறியுள்ளார்.