என்னடா கோலிக்கு வந்த சோதனை! இப்படியெல்லாமா அபராதம் கட்டனும்!
Gurugram municipality fined virat kholi
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குருகிராம் மாநகராட்சி ஆணையம் 500ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டெல்லியில் பிறந்தவரான விராட் கோலியின் சொந்த வீடு அரியானா மாநிலம் குருகிராம் மாநகராட்சி பகுதியில் உள்ளது. இங்கு தான் விராட் கோலி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அந்த வீட்டில் தான் தங்கியுள்ளார்.
விராட் கோலி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொள்வதால் இங்கிலாந்தில் உள்ளார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் படங்களில் நடித்து வருவதால் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்.
இவர்கள் இருவருமே வீட்டில் தங்குவதை விட வெளியில் தங்குவது தான் அதிகம். ஆனால் இவர்களுக்கென்று சொந்தமாக கிட்டத்தட்ட 8 கார்கள் உள்ளன. இதை இவர்களை விட இவர்களது வீட்டில் பணிபுரிபவர்கள் தான் அதிகம் பயன்படுத்துவர் போல.
விராட் கோலியின் வீட்டில் பணிபுரிபவர்கள், குருகிராம் மாநகராட்சியால் குடிநீருக்காக விநியோகிக்கும் தண்ணீரை பயன்படுத்தி கோலியின் வீட்டில் உள்ள காரினை கழுவியுள்ளனர். இதனைக் கண்ட அவர்கள் வீட்டின் அருகில் குடியிருப்பவர்கள் மாநகராட்சி ஆணைபத்திடம் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட குருகிராம் மாநகராட்சி ஆணையம் விராட் கோலியின் வீட்டில் குடிநீரை பயன்படுத்தி காரினை கழுவுவதனை உறுதி செய்தனர். அதன் பின்னர் விராட் கோலிக்கு குருகிராம் மாநகராட்சி ஆணையம் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.