இடையிலேயே வெளியில் சென்று அனைவரையும் பதறவைத்த ஹார்டிக் பாண்டியா! அடுத்து நடந்தது என்ன?
hardik pandya comes back after short break
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் கடந்த ஆட்டத்தை போலவே 5 பௌலர்கள் மட்டுமே உள்ளனர். பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டியா மட்டுமே பந்து வீசக்கூடியவர்கள். இவர்களுக்கு ஏதேனும் நடந்தால் நிச்சயம் விராட் கோலியை தவிர வேறு யாரும் இல்லை.
இதை போன்ற முக்கியமான ஆட்டத்தில் இப்படி ஒரு அணியை வைத்து ஆடுவது சற்று விபரீதம் தான். அப்படி ஒரு சூழ்நிலை தான் இன்று இந்திய அணிக்கு நேர இருந்தது. ஆட்டத்தின் 16வது ஓவரை வீசிய போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவின் வலது தொடையில் திடீரென வலி ஏற்பட்டது. இந்த நாள் அந்த ஓவரின் முடிவில் ஹர்திக் பாண்டியா மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஹார்டிக் பாண்டியாவிற்கு என்ன ஆயிற்று? மீண்டும் பந்துவீச உள்ளே வருவாரா? பேட்டிங் செய்வாரா? என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஓட ஆரம்பித்தது. ஒருவேளை அவர் உள்ளே வரவில்லை என்றால் அவருக்கு பதில் யார் பந்து வீசுவது என்ற கேள்வியும் எழத் துவங்கியது.
நல்லவேளை சிறிது நேரம் ஓய்வில் இருந்த ஹார்த்திக் பாண்டியா 23 ஆவது ஓவரில் மீண்டும் உள்ளே வந்து பீல்டிங் செய்ய துவங்கினார். 27 ஆவது ஓவரில் வழக்கம் போல பந்து வீச ஆரம்பித்தார். ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.