"உறவை ஏற்க தயார்." ஹர்டிக் பாண்டியாவின் Ex மனைவி நடாஷா அறிவிப்பு.!
உறவை ஏற்க தயார். ஹர்டிக் பாண்டியாவின் Ex மனைவி நடாஷா அறிவிப்பு.!

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த 2018 முதல் செர்பிய மாடலான நடாஷாவை காதலித்து வந்தார். அதன் பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் 2020இல் திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி முதலில் திருமணம் ஆனது.
இந்த நிலையில் அடுத்ததாக செர்பிய கலாச்சாரப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் 2024 இருவரும் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
ஆனால், என்ன காரணம் என்பது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நடாஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் உறவுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில், "வாழ்க்கை எனக்கு மீண்டும் ஒரு காதலையும் உறவையும் கொடுத்தால் அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். வாழ்க்கை கொண்டு வருபவற்றை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.