அது என்ன நாக்கு! சதமடித்து வெற்றிக்கு முக்கிய காரணமான ரோஸ் டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்!
harpajan talk about ross tailor
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 5 - 0 என்று வென்றது. அதனை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது..
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் சதமடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். ரோஸ் டெய்லர் சதமடித்த பின்பு அவர் தனது நாக்கை நீட்டி தன்னுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சதத்தை அடித்த பின்னர் ரோஸ் டெய்லரின் செயலை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், '"என்ன ஒரு நாக் @RossLTaylor வாழ்த்துக்கள். ஒவ்வொரு முறையும் 100 ரன்கள் குவித்த பிறகு ஏன் நாக்கை வெளியில் நீட்டுகிறீர்கள் என்று சொல்லுங்கள்" என பதிவிட்டுள்ளார்.