தோனி என்ன என்னோட மனைவியா.? சர்ச்சை பேட்டியை தொடர்ந்து திடீர் அந்தர் பல்டி அடித்த இந்திய வீரர்.!
தோனி என்ன என்னோட மனைவியா.? சர்ச்சை பேட்டியை தொடர்ந்து திடீர் அந்தர் பல்டி அடித்த இந்திய வீரர்.!
இந்தியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தநிலையில் ஹர்பஜன் விரைவில் ஒரு ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி போன்று பேசுபொருளாக மாறியது. 31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த போதிலும் காரணமே இல்லாமல் கழட்டி விடப்பட்டதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி இருந்தார். மேலும், அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த தோனி தமக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார். தோனி மீதுள்ள கோபத்தின் காரணமாகவே இவ்வளவு நாட்கள் கழித்து ஹர்பஜன் இவ்வாறு பேசுகிறார் என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் அளித்த பேட்டியில், தோனி மீது எந்தவித புகாரும் இல்லை கோபமும் இல்லை. முதலில் நான் கூறிய கருத்துக்களை பல்வேறு வகைகளில் எடுத்து கொண்டுவிட்டார்கள். எனக்கு தொனியுடன் கூடிய உறவு நல்லபடியாக உள்ளது. நான் ஒன்றும் அவருடன் திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் என் மனைவியில்லை. அவருக்கு எதிராக எந்த புகாரும் இல்லை. அந்த சமயத்தில் இருந்த தேர்வு குழுவினர் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.