×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல்முறையாக உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் திடீர் ஓய்வு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

முதல்முறையாக உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் திடீர் ஓய்வு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Advertisement

இங்கிலாந்து ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர், இங்கிலாந்து அணி அசுர வேகத்தில் வெற்றிகளை குவித்தது.

தற்போது 35 வயதாகும் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு 126 போட்டிகளில் கேப்டனாக இருந்து 76 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த முதல் கேப்டன் என்ற பெருமையை மோர்கன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஓய்வு அறிவிப்பு குறித்து இயான் மோர்கன் கூறுகையில், மிகவும் கவனமாக ஆலோசித்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளேன். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என்று நம்புகிறேன். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அணிக்கு செய்துள்ள சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன்.

சில சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவங்கள் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும்.  2010-ம் ஆண்டு 20 ஓவர் மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ian morgan #Retirement
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story