நேற்றைய போட்டியில் விராட்கோலி செய்த காரியம்! அதிரடி முடிவெடுத்த ஐசிசி!
ICC fined 25 percentage for virat kohli for arguing with umpire
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றுடன் 30 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், ஆத்ரேலியா அணி இரண்டாவது இடத்திலும், மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் நடுவில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டியின் ஊதியத்தில் இருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
29 வது ஓவரை இந்திய வீரர் பும்ரா வீசியபோது, பந்து ஆப்கான் அணி வீரர் ரகமத் சாவின் காலில் பட்டது. நடுவர் விக்கெட் இல்லை என்று சொன்னதும் விராட்கோலி மூன்றாவது நடுவரிடம் முறையிட்டார். மூன்றாவது நடுவரும் விக்கெட் இல்லை என்று சொல்லியும் விராட்கோலி விடுவதாக இல்லை.
போட்டியின் நடுவர் அலிம் தாரிடம் பலமுறை முறையிட்டார். இது ICC யின் கட்டுப்பாட்டை மீறி விராட்கோலி செயல்பட்டதாக கூறி அவருக்கு ICC நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.