ஐசிசி தரவரிசை: ஒரு நாள், T20 களை கோட்டை விட்ட இந்தியா; டெஸ்ட்டில் முதலிடம் பெற்று ஆறுதல்.!
ICC Ranking - test india- odi england - t20 pakistan
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஆண்டு தோறும் டெஸ்ட், ஒரு நாள், T20 போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளைத் தேர்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியல் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தற்போது ஐபிஎல் 12வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தொடர் நிறைவடைந்ததும் உலகக்கோப்பை போட்டி தொடர் தொடங்க உள்ளது.
இதனால் இத்தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் பலம் வாய்ந்த அணிகள் எவை எவை? பலம் குறைந்த அணிகள் எவை எவை? ஒரு அணியின் நிறை குறைகள் என்னென்ன எந்த அணி கோப்பையை வெல்லும் என்பவைகள் தொடர்பாக கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் அலசி ஆராய்ந்து மதிப்பிட ஏதுவாக அமைந்துள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்-1’ இடத்தை தக்க வைத்துக்கொண்டது. நியூசிலாந்து (108 புள்ளி), தென் ஆப்ரிக்கா (105) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா (104), இங்கிலாந்து (104), இலங்கை (93) ஆகிய அணிகள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன.
இதே போல ஒருநாள் அணிக்காக தரவரிசைப்பட்டியலில் இங்கிலாந்து அணி ‘நம்பர்-1’ இடம் பிடித்தது. இந்தியா (120), நியூசிலாந்து (112), தென் ஆப்ரிக்கா (120) ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்கள் பிடித்தன.
டி-20 அரங்கில் பாகிஸ்தான் அணி (135) நம்பர் இடத்தில் உள்ளது. இந்தியா (122), இங்கிலாந்து (121) அணிகள் அடுத்த இரண்டு இடத்தில் உள்ளது.