ஐசிசியின் முறையற்ற விதிமுறை தான் நியூசிலாந்தின் விதிக்கு காரணம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Icc rules made england to win worldcup
நேற்று லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஐசிசியின் முறையற்ற விதிகளால் தான் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.
2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் 15-15 ரன்களால் டையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அதிக பவுண்டரிகள்(24/16) அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐசிசியின் இந்த விதிமுறை மற்றும் ஓவர் த்ரோவில் பந்து பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டு சென்றால் ரன் கொடுக்கும் விதிமுறையால் தான் நியூசிலாந்து அணி கோப்பையை தவற விட்டது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
குறிப்பாக ரசிகர்களின் கோபத்திற்கு மிகவும் முக்கியமான காரணம் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது தான். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரிகளை விட விக்கெட்டிற்கு தான் அதிக மதிப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ஆனால் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இதனடிப்படையில் பார்த்தால் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்க வேண்டும்.
அல்லது முதலிடத்தை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும். ஆனால் ஐசிசியின் விதிமுறைகள் ஏன் இப்படி கீழ்தரமாக உள்ளது என ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.