தோனிக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்! மீண்டும் அதே மாதிரி ஆடுவது சந்தேகமே!
Icc send letter to remove badge from dhonis gloves
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த க்ளவுஸில் உள்ள முத்திரையை நீக்கக்கோரி ஐசிசி கடிதம் எழுதியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா அணி கடந்த புதன்கிழமை தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரோகித் சர்மா அடி சதமடித்தார்.
தற்பொழுது இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியின் போது தோனி தன்னுடைய கீப்பிங் கிளவுஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, தனது கீப்பிங் கிளவுஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ‘பாலிதான்’ என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்.
இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ என்பதாகும். கடந்த 2011ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணன்ட் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து, 2015ம் ஆண்டு தோனி பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சியும் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதனை கண்டு கொண்ட ஐசிசி, தோனியின் க்ளவுஸில் இருக்கும் அந்த ராணுவ முத்திரையை நீக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்க்கு(BCCI) வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனௌ ஏன் நீக்க வேண்டும் என்ற சரியான காரணத்தை ஐசிசி தெரியப்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து தோனி மீண்டும் அந்த முத்திரையை பயன்படுத்துவாரா என்பது சந்தேகமே.