தோனியும் ரிக்கி பாண்டிங்கும் தான் எப்போதைக்கும் தலைசிறந்த கேப்டன்கள்.. ஐசிசி புகழாரம்!
Icc tweets dhoni and ricky ponting are all time best leaders
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருவரும் தான் எப்போதைக்கும் தலைசிறந்த கேப்டன்கள் என ஐசிசி புகழாரம் சூட்டியுள்ளது.
2002 முதல் 2012 வரை ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் இரண்டு உலகக்கோப்பை(2003, 2007) இரண்டு சாம்பியன்ஸ் டிராபி(2006, 2009) என நான்கு ஐசிசி கோப்பைகளை பெற்று தந்தார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தம் 324 போட்டிகளிலுக்கு கேப்டனாக இருந்த பாண்டிங் 220 போட்டிகளை வென்றுள்ளார்.
2007 முதல் 2016 வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி ஒரு ஒருநாள் உலகக்கோப்பை(2011), ஒரு டி20 உலகக்கோப்பை(2007), ஒரு சாம்பியன்ஸ் டிராபி(2013) என அனைத்து ஐசிசி கோப்பைகளை வென்றவர். மொத்தம் 331 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி 178 போட்டிகளை வென்றுள்ளார்.
தோனி தற்போது ஓய்வு பெற்றதையடுத்து தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் தான் வாழ்நாள் சிறந்த தலைவர்கள் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் இருவரும் இணைந்து படைத்த சாதனைகளையும் பதிவிட்டுள்ளது.