முக்கியமான வீரரை இதுவரை பயன்படுத்தாத சென்னை அணி! சி.எஸ்.கே வை மீட்கப்போகும் அந்த வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இதுவரை 28 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடந்த 7 போட்டிகளில் சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டயாத்தில் சென்னை அணி உள்ளது.
இதனால் இன்று நடைபெறும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் சென்னை அணியை தோல்வியில் இருந்து மீட்க, பிரபலமான வீரரை சென்னை அணி களமிறக்கலாம் என கூறப்படுகிறது. யார் அந்த பிரபலமான வீரர்? அவர் வேறு யாரும் இல்லை, இம்ரான் தாகீர்தான்.
இதற்கு முந்தைய சீசன்களில் சென்னை அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இந்த சீசனில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை.
அஸ்வின், ஹர்பஞ்சன்சிங், ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உதவியுடன் சென்னை அணி பல்வேறு வெற்றிகளை தன்வசமாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருந்து இம்ரான் தாஹீரின் உதவியுடன் சென்னை அணி பல்வேறு வலுவான அணிகளுடன் போராடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் கூட, சென்னை அணி இம்ரான் தாஹீரின் சுழற் பந்தால் மும்பை, ஹைத்ராபாத் போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்த சீசனில் கடந்த 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இம்ரான் தாஹீர் விளையாடவில்லை.
அதற்கு காரணம், ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதுதான். தற்போதுள்ள சென்னை அணியில் வாட்சன், டுப்ளசிஸ், சாம் கரண், பிராவோ ஆகிய நான்கு வீரர்களும் இருப்பதால் இம்ரான் தாஹீர் அணியில் இருந்தும் விளையாடமுடியாமல் இருந்தார்.
ஆனால் கடந்த போட்டிகளில் பிராவோ மற்றும் சாம் கரனின் ஆட்டம் சென்னை அணிக்கு உகந்ததாக இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் சாம் கரண் அல்லது பிராவோ இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு இம்ரான் தாஹீரை விளையாடவைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.