2 அரை சதங்களை கடந்து, இமாலய இலக்கை நோக்கி பயணிக்கும் இந்திய அணி.!
ind vs aus 3rd test melborn good score 215
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து 1-1 என்ற சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் பாக்ஸிங் டே என வருணிக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளான போட்டியில் நாணயம் சுண்டுதல் போட்டிக்கு 7 வயது சிறுவன் ஆா்சி சில்லார் பங்கு பெற்றது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
மேலும் கூடுதல் சிறப்பாக இந்திய அணிக்கு அறிமுக வீரராக இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மயங்க் அகர்வாலுக்கு கேப்டன் விராட் கோலி தொப்பியை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்க மட்டையாளராக ஹனுமா விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய ஹனுமா விஹாரி( 8 ரன்) எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பிறகு களமிறங்கிய புஜாராவும் அகர்வாலும் தங்களது பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினர். அறிமுக போட்டியான இப்போட்டியில் மயங்க் அகர்வால் அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 76 ரன்களில் அவுட் ஆனார். அவர் 8 பவுண்டரிகளையும் 1சிக்சரையும் விளாசினார்.
பிறகு விராட் கோலியும் புஜாராவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய புஜாராவும் அரை சதம் அடித்தார். புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை குவித்துள்ளது.