ஒருநாள் தொடரில் முக்கிய வீரருக்கு இடம் இல்லை.. ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு...
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களின் பட்டியல் வெளியாக
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், T20 போட்டிகளை அடுத்து ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி இரண்டு கோப்பையையும் கைப்பற்றியது. இந்நிலையில் ஒருநாள் போட்டியில் இரண்டு அணிகளும் விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் இங்கிலாந்து வீரர்களின் பட்டியலை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
கேப்டன் இயான் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாமி பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கரண், சாம் கரண், லிவிங்ஸ்டன், பார்க்கின்சன், அதீல் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டாப்லே, மார்க் வுட் ஆகிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.