இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இதுதான் இரண்டாவது முறை! என்ன தெரியுமா?
india chasing 2nd time in worldcup
இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த உலக கோப்பை தொடரில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது இது தான் இரண்டாவது முறை.
இந்திய அணியை பொறுத்தவரை எப்பொழுதும் இரண்டாவதாக காட்டி செய்து இலக்கை எட்டிப்பிடிக்க வலிமையான அணி. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது தான் அதிகபட்சமாக சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தான் முதலாவதாக பேட்டிங் செய்தது. அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில். அதன் பிறகு ஆடிய அடுத்த நான்கு போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில் 4 போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் இரண்டாவதாக பேட்டிங் செய்ய இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் திறமை கொண்ட அணி. இரண்டாவதாக பேட்டிங் செய்து அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை எட்டி பிடித்து வெற்றி பெறுமா இந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.