பலி வாங்குமா தென்னாப்பிரிக்கா! அடுத்தடுத்து சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள்
India losing wickets in 3rd test early
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் மயங் அகர்வால் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள். ரபடா வீசிய 5 ஆவது ஓவரில் மயங் அகர்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ரபடா வீசிய 9 ஆவது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்கள் எடுத்த நிலையில் நோட்ஜ் வீசிய 16 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் உணவு இடைவேளைக்கு முன்னரே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 17 ரன்களுடனும் ரஹானே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்ற தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் இந்திய அணியை பழிவாங்கும் விதமாக சிறப்பாக பந்து வீசி வருகிறது.