இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய போட்டி நடக்குமா, நடக்காதா? சோகத்தில் ரசிகர்கள்!
india newzland cricket semi final struggled by weather condition
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகப்பெரும் விருந்தாக அமைந்திருந்தது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர். தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நிச்சயம் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கனவோடு இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும்- நான்காவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியும் இன்று மோதவுள்ளன.
போட்டி நடைபெறவுள்ள மான்செஸ்டரில் இன்று ஜூலை 9ம் தேதி இன்று லேசான மழை பெய்யும் என மான்செஸ்டர் வானிலை முன்னறிவிப்பு கணித்துள்ளது. மேலும் வானம் மேகமூட்டமான நிலையில் உள்ளது.
எனினும், மழை விட்டு விட்டு பொழியும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் தடைபடும் என கூறப்படுகிறது. அவ்வாறு மழையின் காரணமாக போட்டி தடைபட்டால், நாளை புதன்கிழமை அன்று ரிசர்வ் டே என்ற அடிப்படையில், மீண்டும் அதேபோட்டியை தொடரலாம் என உலக கோப்பை குழு முடிவு செய்துள்ளது.
ஆனால் நாளையும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்திய அணி லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் நேரடியாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.இந்நிலையில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.