இந்தியா- ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி.! முதல் ஓவரிலே ஷாக் கொடுத்த ஸ்டார்க்.! தடுமாறும் இந்திய அணி.!
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்தபடி ஆடிவருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில்T20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஸ்ட்ராக் தனது முதல் ஓவரை வீசினார்.
முதல் ஓவரிலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் முதல் ஓவரில் தான் வீசிய இரண்டாவது பந்திலேயே பிருத்வி ஷாவை போல்ட் ஆக்கினார். இதானால் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் பிருத்வி ஷா. அதன்பின்னர் மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடினர்.
ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் வீசிய பந்தில் நிதானமாக ஆடிய மயங்க் அகர்வால் போல்ட் ஆனார். மயங்க் அகர்வால் 40 பந்துக்களுக்கு 17 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் களமிறங்கியுள்ளார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்தபடி ஆடிவருகிறது.