கடைசி ஓவரில் தூள் கிளப்பிய இந்திய அணி!! துள்ளி குதித்த இந்திய ரசிகர்கள்!!
india vs austrelia second one day match
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி இந்திய அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி தான் சந்தித்த 120 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 40 ஆவது ஒருநாள் சதம் ஆகும்.
அவருக்கு பக்க பலமாக தமிழக வீரர் விஜய் ஷங்கர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 18, விஜய்சங்கர் 46, கேதர் ஜாதவ் 11, ரவீந்திர ஜடேஜா 21, குல்தீப் யாதவ் 3, முஹம்மத் சாமி 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தோனி டக் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.
இந்தநிலையில் இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 65 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஆஸ்திரேலிய அணி, விஜய் சங்கரின் சிறப்பான பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைதுவிக்கெட்டுகளையும் இழந்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.