#IndVsBan Cricket: பார்வையற்றோருக்குக்கான டி20 கிரிக்கெட்டில் இந்தியா 3ம் முறையாக சாம்பியன்..! அசத்திய இந்திய சிங்கங்கள்.!!
#IndVsBan Cricket: பார்வையற்றோருக்குக்கான டி20 கிரிக்கெட்டில் இந்தியா 3ம் முறையாக சாம்பியன்..! அசத்திய இந்திய சிங்கங்கள்.!!
பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் இறுதியில் இந்திய அணி வெற்றி அடைந்தது.
இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
ஆனால், 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணியால் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டி20 போட்டியில் இந்தியா தொடர்ந்து 3ம் முறையாக வெற்றி அடைந்து இருக்கிறது. இந்திய அணியை அஜய் ரெட்டி கேப்டனாக வழிநடத்துகிறார்.
கடந்த 2012, 2017 போட்டிகளில் பார்வையற்றோருக்கான டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது.
இந்திய வீரர்களின் பட்டியலில் பார்வையுள்ளவர், முற்றிலும் பார்வையற்றவர் (B1), பகுதி பார்வை உடையவர்கள் (B2), 2-3 மீட்டர் பார்வை கொண்டவர்கள் (B3) என பல பிரிவுகள் உள்ளன.
அதன்படி, பி1 பிரிவில் லலித் மீனா (ராஜஸ்தான்), பிரவீன் குமார் ஷர்மா (ஹரியானா), சுஜித் முண்டா (ஜார்கண்ட்), நிலேஷ் யாதவ் (டெல்லி), சோனு கொல்கர் (மத்திய பிரதேசம்), சோவெந்து மஹாதா (மேற்கு வங்கம்) ஆகியோர் இருந்தனர்.
பி2 பிரிவில் ஐ அஜய் குமார் ரெட்டி (ஆந்திர பிரதேசம்), வெங்கடேஸ்வரா ராவ் துன்னா (ஆந்திரப் பிரதேசம்), நகுலா படநாயக் (ஒடிசா), இர்பான் திவான் (டெல்லி), லோகேஷா (கர்நாடகா) ஆகியோர் இருக்கின்றனர்.
பி3 பிரிவில் டோம்பாகி துர்கா ராவ் (ஆந்திரப் பிரதேசம்), சுனில் ரமேஷ் (கர்நாடகா), ஏ ரவி (ஆந்திரா), பிரகாஷ் ஜெயராமையா (கர்நாடகா), தீபக் மாலிக் (ஹரியானா) மற்றும் தினகரன் ஜி (புதுச்சேரி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.