புதிய சாதனைகளை அள்ளி குவித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்! இந்தியா அபார வெற்றி!
India vs Bangladesh India new record
நாக்பூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் ஹாட்ரிக் மற்றும் சிறந்த பந்துவீச்சு ஆகிய சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஸ்ரேயர் ஐயர் மற்றும் கேஎல் ராகுலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் 13 ஆவது ஓவரில் மூன்றாவது விக்கெட்டை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து 18 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய அவர் 20 ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் இவர் தான். மேலும் சர்வதேச டி20 அரங்கில் சிறந்த பந்துவீச்சு (7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்) என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு இலங்கை அணியின் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. மேலும் இவர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.