இந்திய அணி படுதோல்வி அடைந்தாலும் இந்த ஒரு விஷயம்தான் சற்று ஆறுதல்.! என்ன தெரியுமா.?
India vs New Zealand second ODI 2020 update
நிசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 273 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48.3 ஓவர்களில் 251 ரன்கள் மட்டுமே அடித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் ஜடேஜாவின் அற்புதமான விளையாட்டு இந்திய ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது நியூசிலாந்து வீரர் நீசம்மை மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்தது அனைவரையும் வியக்க வைத்தது. ஒரு ரன்னுக்கு ஓட முயன்ற நீசம்மை பேக்வார்டு பாயிண்ட்டில் ஃபீல்டிங் செய்த ஜடேஜா, வேகமாக ஓடிவந்து பந்தை பிடித்து ராகெட் வீசுவது போன்று கரெக்ட்டாக ஸ்டம்ப்பில் அடித்தார்.
அதுமட்டும் இல்லாமல், 7-வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். 7 வது விக்கெட்டுக்கு களமிறங்கி முன்னாள் இந்திய அணியின் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் தோனி இருவரும் தலா 6 அரை சத்தம் அடுத்துள்ள நிலையில் இன்று தனது 7 வது அரை சதத்தை 7 வதாக களமிறங்கி சாதித்துள்ளார் ஜடேஜா.