×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடக்க விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் நியூ. தொடரும் இந்திய அணியின் ஆதிக்கம்.!

india vs newsilant 3rd ODI in newsiland

Advertisement

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி தனது தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இப்போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி நாடு திரும்பாமல் அப்படியே  நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3T20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவங்கி தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார். தோனிக்கு சதைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. நியூசிலாந்து அணியில் சான்டநர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கிராண்ட்ஹோம் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக கப்திலும் மன்றோவும் களமிறங்கினர். ஆனால் ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சமி வீசிய 2வது ஓவரில் மன்றோ ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனும் கப்திலும் நிதானமாக ஆட முற்பட்டனர். ஆனால் 6.1 ஓவரை வீசிய புவனேஷ்குமார் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி கப்தில் வெளியேறினார். பிறகு வில்லியம்சனும் 16.2 ஓவரில் சாகல் பந்துவீச்சில் பாண்டியாவிடம்  கேட்ச் ஆகி வெளியேறினார்.

முடிவில் நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் 95 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India vs NZ #3rd odi #icc
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story