4 சிக்ஸர், 3 பவுண்டரி 16 பந்துகளில் வெஸ்டிண்டிஸ் அணியை பறக்க விட்ட பண்ட்!
India vs west indies match score update

இந்தியா - வெஸ்டின்ஸ்டிஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதல் பந்திலையே ஆட்டம் இழக்க, ரோஹித் சர்மா, KL ராகுல் என இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர் அணியின் பந்து வீச்சை அடித்து நெருங்கினர்.
இதில் கூடுதல் பலமாக இளம் வீரர்கள் ஷ்ரேயஸ் அய்யரும், ரிஷப் பண்ட் இருவரும் அபாரமாக ஆடி இந்திய அணியின் வலிமையான இலக்கிற்கு உதவினார். இதில் வெறும் 16 பந்துகளில் 39 ரன்கள், இதில் நான்கு சிக்ஸர், மூன்று பவுண்டரி என ரிஷப் பண்ட் வெறித்தனமாக அடித்து எதிர் அணி வீரர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.