×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"2nd T20: சரவெடியாய் வெடித்த இந்தியா; புஷ்வாணமாகிய மே.தீவுகள் அணி" இந்தியா அபார வெற்றி!

india won in 2nd T20 against WI

Advertisement

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்று . வருகிறது. முதலாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ப்ராத்வெயிட் பவுலிங்கை தேர்வு செய்தார். 

வழக்கம் போல் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆட்டம் முதலே ரோஹித் மற்றும் தவான் இருவரும் அதிரடியாக ஆடினர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டுக்கான  பார்ட்னெர்ஷிப் 100 ரன்களை கடந்தது.

சிறப்பாக ஆடிய தவான் 14வது ஓவரில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 123 இருந்தது. அடுத்து வந்த  ரிசப் பண்ட் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த லோகேஷ் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டியில் தனது நான்காவது சதத்தை கடந்தார். இவர் 61 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடித்து 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20 போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கலீல் அஹமத் பந்துவீச்சில் துவக்க ஆட்டக்காரர்கள் ஹோப் மற்றும் ஹெட்மயர் ஆரம்பத்திலே அவுட்டாகி வெளியேறினார். ஹோப் 6 ரன்களும் ஹெட்மயர் 15 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த டேரன் பிராவோ சிறிது நேரம் நிலைத்து நின்று 23 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் தனிப்பட்ட நபர் அடித்த அதிகபட்ச ரன் இதுதான்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் சரசரவென சரிய ஆரம்பித்தன. 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ப்ராத்வெயிட் மற்றும் கீமோ பால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19வது ஓவரில் 20 ரன்கள் எடுத்த நிலையில் பால் ஆட்டம் இழந்தார்.

பும்ரா வீசிய கடைசி ஓவரில் பியர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக களமிறங்கிய தாமஸ் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். கடைசியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ப்ராத்வெயிட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.

இந்திய அணி சார்பில் புவனேஷ் குமார், கலீல் அஹ்மத், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#india won in 2nd T20 against WI #lucknow T20
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story