இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் இறுதி போட்டி!. இறுதி பந்தில் திக்.. திக்.. த்ரில் வெற்றி!.
india won t20 final match

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
டேரன் பிராவோ 43 ரன்களும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 4(6) ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார்வெளியேறினார். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 17(10) ரன்களில் வெளியேறினார்.
அடுத்ததாக ஷிகார் தவானுடன் ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றிபாதையை நோக்கி சென்றது.
இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.