இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான அந்த மெகா கூட்டணி! வரலாற்று சாதனை!
India won the 3rd odi match against to australia
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து நடந்துவரும் ஒருநாள் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி பெற்றது.
அடுத்ததாக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் அசத்தல் வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று மீண்டும் வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்களிலும் தவன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய கோலி, 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் தோனியுடன் கூட்டணி சேர்ந்தார் கேதர் ஜாதவ். இருவரும் நின்று நிதானமாக ஆடினார். கோலி அவுட்டான நிலையில் அதன் பின்னர் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி கடைசி ஓவரில் மாபெரும் வெற்றிபெற்றது.
4வது விக்கெட்டுக்கு தோனியுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் சிறப்பாக ஆட, 50வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் தோனி 87 ரன்களையும் கேதர் ஜாதவ் 61 ரன்களையும் குவித்திருந்தனர். இந்த போட்டியில் வென்றதன்மூலம் 2-1 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.