சிக்ஸரில் தெறிக்க விட்ட தோணி! இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!
India won the second ODI match against to Australia
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது இந்திய அணி.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 298 ரன்களை குவித்தது. ஷான் மார்ஷின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
299 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்து தவான் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அதிரடியை தன் கையில் எடுத்த ரோஹித் சர்மா, 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
நிதானமாக ஆடிய கேப்டன் கோலி, இலக்கை வெற்றிகரமாக எட்டாமல் 104 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக், தோனி இருவரும் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தியை அணியை வெற்றிபெற வைத்தார் தோணி. இதன் மூலம் தான் இன்னும் பெஸ்ட் பினிசர்தான் என்பதை நிரூபித்துள்ளார் தோனி.