யுவராஜ் சிங்கை நடுங்க வைத்த அந்த 2 வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் யார் தெரியுமா?அவரே கூறிய தகவல்.!
indian all rounder - yuvraj sing - muthia muraliotharan - mcrath
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் யார் என்றல் அனைவரும் யுவராஜ் சிங்கை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார்.
2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவ்ராஜ் சிங். அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் யுவராஜ் இருந்துள்ளார். 2011 உலகக்கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதை யுவராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கடந்த 2012ல் டெஸ்ட் போட்டியிலும், ஒருநாள், டி -20 போட்டியில் கடந்த 2017ல் விளையாடிய யுவராஜ் சிங், நேற்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்னார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 40 டெஸ்ட் (1900 ரன்கள்), 304 ஒருநாள் (8701 ரன்கள்), 58 டி20 (1177) என மொத்தமாக 11,778 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் குறித்து அவர் கூறும்போது: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் ஆகியோருக்கு எதிராக பேட்டிங் செய்கின்ற போது கொஞ்சம் நடுக்கம் இருக்கும். எனக்கு பிடித்த வெளிநாட்டு வீரர்கள் என்றால் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், விண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தான்.’ என்றார்.