தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நியூசிலாந்து தொடரிலிருந்து விராட் கோலி திடீர் நீக்கம்; ரசிகர்கள் ஏமாற்றம்.!

Indian cricket captan viraht kohli rest nwz series

indian-cricket-captan-viraht-kohli-rest-nwz-series Advertisement

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்படுவதாக அணி தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அந்த அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 3T20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இன்று, நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகள் மற்றும் 3T20 போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார்.

viraht kohli

இதுகுறித்து, இந்திய அணியின் தேர்வாளர்கள் தெரிவிக்கும்போது விரைவில் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அதிக போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு பதிலாக 4 ,5 மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viraht kohli #Kohli #BCCI
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story