×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விராட் கோஹ்லி இல்லாமல் ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி .

விராட் கோஹ்லி இல்லாமல் ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி .

Advertisement

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28 ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

 இன்னிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கான காரணத்தை வெளிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள், தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்திய மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்தது. இதில் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோஹ்லி இல்லாமல் இந்திய அணி ஆசிய கோப்பையில் களமிறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது “கோஹ்லியின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும், அடுத்தடுத்த தொடர்களில் அவரின் தேவையையும் கருத்தில் கொண்டே கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வே இல்லாமல் மூன்று விதமான போட்டிகளிலும் கோஹ்லி தொடர்ந்து விளையாடி வருகிறார், அதன் காரணமாகவே ஆசிய கோப்பையில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும்  வேகப்பந்து வீச்சில் ஒரு இடம் காலியாக உள்ளதை போன்று உணர்கிறோம், அதன் காரணமாகவே இந்த தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலில் அஹமதுவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்” என்றார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virat #cricket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story