பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியை பஞ்சராக்கிய இந்திய அணி.! வாழ்வா-சாவா ஆட்டத்தில் மாஸ் காட்டிய இந்திய அணி.!
பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியை பஞ்சராக்கிய இந்திய அணி.! வாழ்வா-சாவா ஆட்டத்தில் மாஸ் காட்டிய இந்திய அணி.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றய போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும் என்ற சூழ்நிலையில், நேற்றய போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது.
இந்தநிலையில், நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் அரைசதம் அடித்த நிலையில் கெய்க்வாட் 57 ரனிலும், கிஷன் 54 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்சல் படேல் 4 விக்கெட்டும் சாஹல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.