இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மட்டுமில்லாமல், பல சாதனைகள் செய்து அசத்தல்!.
indian players more records in australia test
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.
மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், அங்கு கடும் மழை பெய்து வருவதால் ஆட்டம் தடைபட்டது. பின் னர் உணவு இடைவேளையின்போது மழை நின்றிருந்ததால் அதன்பின் போட்டித் தொடங்கியது.
இந்த போட்டிகளில் வென்றதன் மூலம் இந்தியா வீரர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர்:
11 விராட் கோலி (24)*
11 கங்கூலி (28)
06 எம்.எஸ் தோனி (30)
05 டிராவிட் (17)
டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பவுலர் :
619 கும்ப்ளே
434 கபில் தேவ்
417 ஹர்பஜன்
342 அஸ்வின்
311 ஜாகிர் கான்
267 இஷாந்த் ஷர்மா *
266 பிஷன் பேடி
வெளிநாடுகளீல் வெற்றி பெற்ற போட்டியில் 4 போட்டிகளில் 50ற்கு மேற்பட்ட ரன்கள் குவித்ததில் புஜாரா முன்னிலை
50 ரன்கள் 179 பந்துகள், முதல் இன்னிங்ஸ், ஜொகனஸ்பெர்க்
72 ரன்கள் 208பந்துகள், 2வது இன்னிங்ஸ், டிரெண்ட் பிரிட்ஜ்
123 & 71, அடிலெய்ட்
106 ரன்கள் 319பந்துகள், மெல்போர்ன்